Search This Blog

Thursday, 30 August 2012

Ullathil Nalla Ullam - Karnan

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

7 comments:

  1. Corrections:
    //மன்னவர் பனி ஏற்கும்
    கண்ணனும் பனி செய்ய
    உன்னடி பணிவானடா கர்ணா..//

    மன்னவர் பணி ஏற்கும்
    கண்ணனும் பணி செய்ய
    உன்னடி பணிவானடா கர்ணா..

    ReplyDelete
  2. என்றும் உன் வழி நான் தானடா கர்ணா
    மகேஸ்வரனை மன்னித்து அருள்வாயடா

    ReplyDelete
  3. செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா
    கர்ணா, வஞ்சகன் கண்ணனடா

    ReplyDelete
  4. மனதில் என்றும் நீங்காத அற்புத பாடல் வரிகள்....அற்புதமான இசை..... அற்புதமான காட்சி...கண்ணன் என்று சொன்னால் NTR அவர்களின் அற்புதமான தோற்றம் தான் நினைவுக்கு வரும்....

    ReplyDelete